மக்கள் நேர்காணல் முகாம்

கீழ்வேளூர் அருகே மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.

Update: 2022-11-10 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே அய்யடிமங்கலம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.முகாமிற்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுதவிஜயரெங்கன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் கஸ்தூரி கனகரத்தினம் வரவேற்றார்.

இதில் வருவாய் துறை, வேளாண்மை துறை, தோட்டகலைதுறை சார்பில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் கூட்டுறவு துறை துணை பதிவாளர் முகமது நாசர், மண்டல துணை தாசில்தார் எழிலரசி, தேவூர் வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர் பெனாசிர் பேகம் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்