மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தம் 17 மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.