போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-19 21:34 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் சீனிவாசன் (கிழக்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 31 பேர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 25 பேர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்