மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.

Update: 2023-04-03 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், தொழில் தொடங்க கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 320 மனுக்களை கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். .கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்