மக்கள் குறைதீர்வு கூட்டம்

ஆரணியில் மக்கள் குறைதீர்வு கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது

Update: 2022-12-12 13:23 GMT

ஆரணி

ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார்.

அடையபலம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் கொடுத்த மனுவில், எனது கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் பழைய ஆவணங்கள் வைக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது,

புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருப்பதால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வருவாய்த்துறைக்கு சம்பந்தமான பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், முதியோர் உதவித்தொகை, ஆற்று பாசன கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட 45 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்