மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-14 18:45 GMT

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 158 மனுக்களை வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் மற்றும், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்