மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2 லட்சம் நிவாரணம்

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

Update: 2023-09-11 18:45 GMT

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல் கோரி 62 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 21 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள்மற்றும் விதவை உதவித்தொகைகோரி 18 மனுக்களும், புகார் தொடர்பான 33 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 14 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 42 மனுக்களும் என மொத்தம் 190 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

ரூ.2 லட்சம் நிவாரணம்

முன்னதாக, சீர்காழி வட்டம் ராதாநல்லூர் கிராமத்தை சேர்ந்த வீரமணி கடந்த ஆகஸ்டு மாதம் திருக்கடையூரில் கதண்டு கடித்து உயிரிழந்தார். இறந்தவரின் வாரிசுதாரருக்கு கலெக்டர் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்