தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது

Update: 2023-03-12 18:45 GMT

சிவகங்கை, 

தேசிய சட்ட பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா வழிகாட்டுதலின்பேரில் மாவட்டத்தில் 3 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை மற்றும் தேவகோட்டை நீதிமன்றங்களில் போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதிகள் சுந்தரராஜ், கீதா, வக்கீல்கள் ராமலிங்கம், சௌந்திரபாண்டியன், குருமூர்த்தி, சேதுராமச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 102 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 6 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.65 லட்சத்து 60 ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்