முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

திருப்பத்தூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2022-09-25 16:30 GMT

ஆடி மற்றும் புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதில் புரட்டாசி மஹைளய அமாவாசை மற்ற அமாவாசைகளை விட சிறந்தது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சிறந்த பலன் ஏற்படும் என்பது நம்பிக்கை. இதனால் ஆற்றங்கரை மற்றும் குளக்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் தர்ப்பணம் நிகழ்ச்சி மேற்கொள்ளப்படும். மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருப்பத்தூர் சின்ன குளம் மாரியம்மன் கோவில், பெரியகுளம், தர்ம வீர ஆஞ்சநேயர் கோவில், வெங்களாபுரம் ஆஞ்சநேயர் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்