வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; மக்கள் அவதி
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொள்ளிடம் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வடிகால் மதகு வழியாக வெள்ளம் கொள்ளிடம் பூசை நகருக்குள் புகுந்துள்ளது. அங்கு குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.