குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் அவதி

குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2023-08-01 18:45 GMT

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கத்தரி வெயிலுக்கு இணையாக தற்போது வாட்டி வதைக்கும் வெயிலினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். இதனால் வெளியூர் வேலைக்கு செல்வோர் காலை வெயில் தொடங்கும் முன்னரே சென்று விட்டு இரவில்தான் வீடு திரும்புகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய இந்த நிலையில் பல்வேறு கிராம பகுதிகளில் மின் அழுத்தம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மின்சாதன பொருட்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி நிறுத்தப்படும் மின்சாரத்தினால் குழந்தைகள், முதியோர் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். இரவில் ஏற்படும் புழுக்கத்தால் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, எஸ்.புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை நீக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்