ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்

பேராவூரணி அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2022-11-27 19:46 GMT

பேராவூரணி அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பயணிகள் நிழலகம்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தெற்கு நாட்டாணிக்கோட்டை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பழமையான பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலக கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது.

பேராவூரணியில் இருந்து பூக்கொல்லை வழியாக நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், கொரட்டூர், ரெட்டவயல் பகுதி வரை செல்லும் சாலை, இரு சாலையாக பிரிந்து ஒன்று ஆவுடையார்கோவில் பகுதிக்கும், மற்றொரு சாலை கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன.

அச்சம்

இந்த நிலையில் நாட்டாணிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள இந்த பயணிகள் நிழலக கட்டிடத்தை தினசரி ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பயணிகள் நிழலக கட்டிம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் அதற்குள் நிற்பதற்கு அச்சப்படுகின்றனர். இது மட்டுமின்றி இந்த நிறுத்தத்தில் பஸ்கள் முறைப்படி நிறுத்தப்படுவதில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும் என்றும், பஸ்கள் முறையாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்