எல்லைக்கல் நட வந்த அதிகாரிகளை பொதுமக்கள் மறித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே புதிய புறவழிச்சாலை பணிக்கு எல்லைக்கல் நட வந்த அதிகாரிகளை பொதுமக்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-15 19:56 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணத்தில் 3-ம் கட்ட புறவழிச் சாலை அமைக்க கருப்பூர் சாக்கோட்டை ஊராட்சியில் நெடுஞ்சாலை துறையினரால் விவசாய நிலங்கள் சுமார் 10 ஏக்கர் வரை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கும்பகோணத்தில் 3-ம் கட்ட புறவழிச்சாலை திட்டம் தயாரிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் திட்டம் முடிவுற்ற நிலையில் டி.ஆர்.ஓ. அறிவிப்பு ஆணை வெளியானது.இந்தநிலையில் சாக்கோட்டை முனீஸ்வரன் கோவில் அருகில் வயலில் எல்லைக்கல் நட தனியார் ஒருவரின் டிராக்டரில் எல்லை கற்கள் ஏற்றிக் கொண்டு வரப்பட்டது. அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் உடன் வந்தனர். இதனால் 10 விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தனிநபருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் கூறி டிராக்டர் மற்றும் அதிகாரிகளை மறித்தனா். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் அங்கு திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கல் ஏற்றி வந்த தனியார் டிராக்டரை நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்