வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2023-05-11 19:15 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது. இந்த சாலையின் ஒருபுறம் நெடுஞ்சாலைத்துறை மூலம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மற்றொருபுறம் வீட்டுக்கு வீடு குழாய்கள் மூலம் கியாஸ் வழங்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த சாலையின் நடுவில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கே இடம் உள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று அந்த வழியாக வந்த வாகனங்களை சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரப்பிள்ளை, டென்னிசன் ஆகியோர் அங்கு சென்று வாகனங்களை சிறைபிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் ஒரு புறம் இருந்த பள்ளம் மூடப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பொதுமக்கள் திடீரென வாகனங்களை சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்