வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
அரக்கோணத்தில் வீடுகள மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
அரக்கோணத்தில் வீடுகள மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
சாலை மறியல்
அரக்கோணம் - திருத்தணி பிரதான சாலையில் மங்கம்மா பேட்டை மேம்பாலம் அருகே நாகலம்மன் நகர் பகுதியில் கைனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்ததா கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அவர்கள் கைனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் மழை நீர் வெளியேறாமல் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்குள்ள கால்வாய் வழியாக வடமாம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் சென்றடையும். ஆனால் கால்வாய் முறையாக தூர்வாரமல் இருப்பதால் கால்வாய் இருந்த இடம் தெரியாத அளவுக்கு உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வெளியேராமல் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
பேச்சுவார்த்தை
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாய் பகுதிகளை தூர்வாரி மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சண்முகசுந்தரம் கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அப்போது கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, துணை தாசில்தார் சரஸ்வதி, கைனூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர் உடன் இருந்தனர். மறியலின் போது டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் மற்றும் அருண் தலைமையிலான போலீசார் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படாத வகையில் சரி செய்தனர்.