குப்பை கிடங்கை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பாபநாசத்தில் உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-14 19:46 GMT

 பாபநாசத்தில் திருப்பாலைத்துறை எஸ்.பி.ஜி. மிஷின் தெரு அருகில் குப்பை கிடங்கு உள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இதனால், இந்த குப்பைக்கிடங்கில் இருந்து அதிகளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் புகைமூட்டம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மறியல்

ஆகவே, இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை-கும்பகோணம் சாலையில் திருப்பாலைத்துறை மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் கீர்த்திவாசன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், செயல் அலுவலர் குமரேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்