வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

வந்தவாசி அருகே வீட்டுமனை பட்டாவழங்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-29 17:59 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே வீட்டுமனை பட்டாவழங்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பல ஆண்டு கோரிக்கை

வந்தவாசியை அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த கிராமத்துக்கு உட்பட்ட இடத்தில் சென்னவரத்தை சேர்ந்த 27 ேபர்களுக்கும் பிருதூரை சேர்ந்த 25 ேபர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு வந்தவாசி தாசில்தார் தலைமையில் சர்வேயர்கள் அங்கு வந்து பணியை தொடங்கினர்.

ஆனால் மாலையிட்டான் கிராமத்தில் ஏற்கனவே அதே சர்வே எண்ணில் வசிக்கிற 48 ேபர்களுக்கு இன்னும் வீட்டுமனை பட்டா வழங்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெளியூரை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கிவிட்டு உள்ளூரில் வசிக்கும் தங்கள் தரப்பை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் மறியல் நடந்ததால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுக்க தொடங்கின. தகவல் அறிந்த வந்தவாசி தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

எனினும் இந்த மறியலால் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்