செங்கல்மேட்டில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கக்கோரி செங்கல்மேட்டு ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-26 00:15 IST

புவனகிரி,

கீரப்பாளையம் ஒன்றியம் செங்கல்மேடு கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுட்டனர்.

அப்போது அவர்கள், தங்களுக்கு கடந்த 6 மாத காலமாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. மேலும் பல மாதங்களாக கோதுமையும் வழங்கவில்லை. இது தவிர இந்த மாதத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இது வரை வழங்காமல் எங்களை அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர்.

நடவடிக்கை

குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 35 கிலோ அரிசியும் 20 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களான நாங்கள் பெரும சிரமப்பட்டு வருகிறோம். இதை தவிர்க்க எங்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முறையாக வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்