மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

பங்களா சுரண்டையில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-02-19 18:45 GMT

சுரண்டை:

பங்களா சுரண்டை பஸ் நிறுத்தம் எதிரே உள்ள மைதானத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ேபச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பங்களா சுரண்டை பகுதியில் உள்ள 2 பள்ளிக்கூடங்களின் அருகே நகராட்சி சார்பில் மின்மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இப்பகுதி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், வயல் வேலைக்கு செல்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இங்கு மின்மயானம் அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள், பங்களா சுரண்டை பகுதியில் மின் மயானம் அமைக்கப்படாது. சுரண்டை நகராட்சி பகுதியில் பொதுமக்களின் கருத்து கேட்காமல் மின்மயானம் அமைக்கப்படாது என்று உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்