ஓய்வூதிய சங்க மாவட்ட மாநாடு

விருதுநகரில் ஓய்வூதிய சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.

Update: 2022-08-11 19:58 GMT

விருதுநகரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 4-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மாநாட்டினை ஓய்வூதிய அமைப்புகளின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் சந்திர ராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் மாரியப்பன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநில துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி வாழ்த்தி பேசினார். மாநில காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், வனக்காவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் கிராமப்புற நூலகர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும். 1.1. 2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் உலகநாதன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்