20 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

20 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Update: 2022-10-12 18:45 GMT

வேதாரண்யம் நகராட்சி பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் கடந்த 11-ந்தேதிக்குள் பிடித்து கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் மாடுகள் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்படும். அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு ரூ. 1000 அபாராதமும், பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நேற்று கடைவீதியில் சுற்றுத்திரிந்த 20 மாடுகளை நகராட்சி ஆணையர் ஹேமலதா மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்கள் பிடித்தனர். நகராட்சி மூலம் பிடிக்கப்பட்ட மாட்டிற்கு ரூ.1000 வீதம் அபராதமும், பராமரிப்பு செலவும் வசூலிக்கப்படும் எனவும், தொடர்ந்து மாடுகள் பிடிக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் ஹேமலதா எச்சரிக்கை விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்