அசல் தொகையை செலுத்தினால் அபராத வட்டி தள்ளுபடி

தாட்கோ மூலம் கடனுதவி பெற்றவர்களுக்கு அசல் தொகையை செலுத்தினால் அபராத வட்டி தள்ளுபடி மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

Update: 2023-09-09 18:45 GMT

விருதுநகர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய நிறுவனங்களின் கடன் நிதி உதவி திட்டத்தில் 1990-91 முதல் 2011-12 வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். இத்திட்டம் டிசம்பர் மாதம் இறுதி வரை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்