குறியீடு இல்லாத தேக்கு மரத்தடிக்கு அபராதம்
குறியீடு இல்லாத தேக்கு மரத்தடிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரக பகுதியில் ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளது.
இந்த நிலையில் முண்டந்துறை பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் காற்றில் விழுந்த பட்டுப்போன தேக்கு மரங்களை வெட்டுவதற்காக வனத்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றை பாபநாசம் வனச்சோதனை சாவடி வழியாக லாரியில் கொண்டு வந்தனர்.
அப்போது தேக்கு மரக்கட்டைகளை ஆய்வு செய்தபோது அதில் மரத்தடிகளில் சொத்து குறியீடு இல்லாதது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர், சம்பந்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் லாரியை விடுவிடுத்தனர்.