மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்-உரிமையாளர்களுக்கு அபராதம்

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

Update: 2023-08-11 11:05 GMT

வந்தவாசி

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரோட்டில் சுற்றித்தியும் மாடுகளால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் சுற்றி திரிந்த மாடு ஒன்று சிறுமியை முட்டி தள்ளி கீழே தள்ளியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதை அடுத்து தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் எதிரொலியாக வந்தவாசியில் நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம், பஜார் வீதி, அச்சரப்பாக்கம் சாலை, காந்தி சாலை, சன்னதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அவற்றை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்