குற்றவாளிகளை ஆஜர்படுத்தாத இன்ஸ்பெக்டர்களுக்கு அபராதம்

வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தாத இன்ஸ்பெக்டர்களுக்கு அபராதம் விதித்து திருமயம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-30 18:10 GMT

திருட்டு வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2003-ம் ஆண்டு புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து குற்றவாளியை போலீசார் ஆஜர் படுத்தவில்லை என கூறி அவர்களுக்கு நீதிபதி அபராதம் விதித்தார்.

இதேபோல் பொன்னமராவதி வேந்தன்பட்டி கிராமத்தில் தடையை மீறி கொரோனா காலத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருமயம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது குற்றவாளிகளை ஆஜர்படுத்தாத போலீசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பு

இதேபோல் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வழக்கில் நீதிமன்றம் பிடி வாரண்டு பிறப்பித்தும் பிடி வாரண்டு பெற்றுக் கொள்ள வராத போலீசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழக்கும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு தலா ரூ.500 விதித்து திருமயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்