வணிக வளாகங்கள், வீடுகள் அருகில் மழைநீர் தேங்கி இருந்தால் அபராதம்

வணிக வளாகங்கள், வீடுகள் அருகில் மழைநீர் தேங்கி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

Update: 2022-11-03 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் சாந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேவகோட்டை நகராட்சி பகுதியில் வரும் மழைக்காலங்களில் கொசுவினால் ஏற்படும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு நகராட்சி சார்பில் தினசரி கொசுத்தடுப்பு பணியாளர்களை கொண்டு நகர் பகுதியில் உள்ள வீடுகளில் தினசரி கொசுப்புழு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நோய் தொற்றினை தடுக்கும் பொருட்டு நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்