'ஹெல்மெட்' அணியவில்லை எனவாகனம் ஓட்டாத தொழில் அதிபருக்கு ரூ.1,000 அபராதம் விதிப்புசெல்போனுக்கு வந்த தகவலால் அதிர்ச்சி

Update:2023-09-10 01:55 IST

சேலம்

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றதால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆன்லைனில் இருந்து அதை பதிவிறக்கம் செய்து பார்த்தார்.

அப்போது ஹெல்மெட் போடாமல் மொபட் ஓட்டும் வேறு ஒருவரின் புகைப்படத்துடன் அந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த தொழில் அதிபர் சம்பவத்தன்று ஓமலூர் பகுதிக்கு செல்லவில்லை. இதுகுறித்து அவர் ஓமலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தவறுதலாக வந்துவிட்டது என்றும், நீங்கள் ஒரு மனு எழுதி கொடுத்தால் அதை சரி செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தொழில் அதிபர் நேற்று சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து இதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்