கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்18 பேருக்கு அபராதம்
சேலம்
சேலம் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மளிகை, பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 18 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்து புகையிலை பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவனிடம் கேட்ட போது கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் 209 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 18 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து, மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்று கூறினார்.