3 கோழி இறைச்சி கடைகளுக்கு அபராதம்

சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட 3 கோழி இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-09-21 21:15 GMT

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் திண்டுக்கல் நகரில் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். நாகல்நகர், குள்ளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகள் என மொத்தம் 16 கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது 3 கோழி இறைச்சி கடைகளில் சுகாதாரம் இல்லாமல் இறைச்சி விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து 3 கடைகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இறைச்சியை பார்சல் செய்து வழங்க வைத்திருந்த 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்