மானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2023-07-05 21:57 IST

சேவூர்

அவினாசி தாலுகா சேவூர் அருகே பொங்கலூர் பகுதியில் மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பொங்கலூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் வீட்டில் மான் கறி சமைத்துக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் பொங்கலூரைச் சேர்ந்த ரவி (வயது 40), ரஞ்சித்குமார் (28), நாராயணன் (45), வெள்ளியங்கிரி (40) ஆகியோரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் மானை வேட்டையாடி சமைத்து உண்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்