தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி
குடவாசல் அருகே தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி நடந்தது.
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள அகரஓகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்பட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி வகுப்பு நடந்தது.பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன், ஜெயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராஜகுரு பேசுகையில், ஆசிரியர்கள் அறிவியல் பாடம் சார்ந்த செய்முறைகளில் உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு தெளிவுப்பட பாடத்தை நடத்த வேண்டும். மாணவர்களின் கவனத்தை சிதறவிடாமல் இருக்க தலைமை ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதில் 100-க்கும் அதிகமான தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.