பஸ்சில் மோதி மயில் படுகாயம்

கிருஷ்ணராயபுரம் அருகே பஸ்சில் மோதி படுகாயம் அடைந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள்கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-11-01 19:13 GMT

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 31-ந் தேதி காலை 10 மணியளவில் பஸ் ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வளையர்பாளையம் பகுதியில் சாலையோரம் இரை தேடி சென்ற மயில் எதிர்பாராதவிதமாக பஸ்சில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தது. அப்போது அந்த வழியாக சென்ற மெக்கானிக் ராஜேந்திரன் என்பவர் அந்த மயிலை மீட்டு தண்ணீர் கொடுத்தார். பின்னர் மயிலை தனது வீட்டுக்கு கொண்டு சென்று அதற்கு தேவையான பழங்கள் மற்றும் தானியங்களை அளித்தார். ஆனால் மயில் எதையும் சாப்பிடவில்லை. இதையடுத்து, காயமடைந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கால்நடைத்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தும் இதுவரை யாரும் வரவில்லை என தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த மயிலை மீட்டு அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்