முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து சமாதான கூட்டம்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து சமாதான கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-29 18:30 GMT

ஆலங்குடி அருகே மாங்காடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதையடுத்து மாவட்ட உதவி கலெக்டர் ஜெயாஸ்ரீ தலைமையில், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, மாங்காடு கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மாங்காடு கிராமமக்கள் 2023-ம் ஆண்டு திருவிழா நடத்துவது என முடிவு செய்து ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது. இதையடுத்து ஆலங்குடி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டும், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆலங்குடி தாசில்தாரால் பிறப்பிக்கப்பட்ட சமாதான கூட்டத்தின் நடவடிக்கையின் படியும், தற்போது உள்ள நிலையிலேயே தொடர்ந்து வழிபாடு மண்டகப்படி செயல்படுத்துவது. ஆலங்குடி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் வழக்கில் இரு தரப்பிலும் தங்களது ஆதார ஆவணங்களை சமர்ப்பித்து உத்தரவு பெற்றுக்கொள்வது என்று சமாதான கூட்டத்தில் ஒருமனதாக தீர்வு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்