கோவில் திருவிழா நடத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை

கோவில் திருவிழா நடத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை

Update: 2023-04-17 13:49 GMT

அருள்புரம்

பல்லடம்

கோவில் திருவிழா

பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையம் கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கள்ளிப்பாளையம், வலையபாளையம், துத்தேரிபாளையம். கிராம மக்கள் இந்த .கோவிலில் வழிபட்டு வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் விழா நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் விழா நடத்த மூன்று கிராம மக்களும் தீர்மானித்தனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை பல்லடம் பொங்காளி அம்மன் கோவிலில் நடந்தது. ஒரு தரப்பைச் சேர்ந்த மக்கள் விழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். மற்றொரு தரப்பினர் அனைத்து ஊர் பெரியவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் தான் வரவில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிற்கு இடையே வாக்குவாதம் நீடித்தது.

பேச்சுவார்த்தை

இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நேற்று மாலை நடந்தது. கோவில் தக்கார் ராமசாமி மற்றும் காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரு தரப்பு மக்களும் விழா கமிட்டியில் இணைந்து விழாவை நடத்த வேண்டும். எனவே மூன்று கிராமத்தில் இருந்தும் ஆட்களை தேர்வு செய்து விழா கமிட்டியில் சேர்க்க பட்டியல் தாருங்கள் என தாசில்தார் தெரிவித்தார். உடனடியாக ஒரு தரப்பிலும் 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டது. மற்றொரு தரப்பினர் நாளை வரை அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து விழா கமிட்டி அமைக்கப்பட்டதும் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என தாசில்தார் கூறியதை தொடர்ந்து பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.


Reporter : P.Balasubramanian Location : Tirupur - Arulpuram

Tags:    

மேலும் செய்திகள்