பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 321 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூரை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததால் அவரின் மனைவி ரஞ்சிதாவுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவித்தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழங்கினார்.