அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி

ஓசூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2022-10-10 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமை மருத்துவமனை

ஓசூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இதனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக, தரம் உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் இல்லாததால், சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்து நிற்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிகிக்சைக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு அவசர பிரிவுக்கு டாக்டர்கள் இல்லாததால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் அவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்