கீரிப்பாறையில் மத போதகரின் மனைவி தீக்குளித்து தற்கொலை

மத போதகரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-01 15:40 GMT

அழகியபாண்டியபுரம்:

தடிக்காரன்கோணத்தை அடுத்துள்ள கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்தவர் சேம்ராஜ். அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் மதபோதகராக உள்ளார். இவருடைய மனைவி பியூலா கிறிஸ்டெல்லா பெல் (வயது50). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் பியூலா கிறிஸ்டெல்லா பெல் நோயால் அவதியடைந்து வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதியம் வீட்டின் பின்புறம் தன்மீது மண்எண்ெணய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது மகள் சத்தம் போட்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இதுகுறித்து கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--

Tags:    

மேலும் செய்திகள்