புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Update: 2023-10-01 20:47 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் காளீஸ்வரி, மேலாளர் செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து கூட்டத்தில், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்தை மீறி விளம்பர பலகைகள் வைக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்