குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதி

குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதி

Update: 2022-10-27 18:45 GMT

கோத்தகிரி

குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இதில் சுமார் 40 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது பஸ்சில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவதிக்குள்ளான பயணிகள் கண்டக்டரிடம் புகார் அளித்துள்ளனர். அதற்கு அதெல்லாம் என்னுடைய வேலை இல்லை எனக் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கட்டணம் செலுத்தி தான் நாங்கள் பயணிக்கிறோம். பஸ்சை சுத்தம் செய்ய வேண்டாமா? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கண்டக்டர் அதைப் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். துர்நாற்றம் தாங்க முடியாத பயணிகள் துணிகளைத் கொண்டு தங்களது மூக்கைப் பொத்தியாவாறு சிரமத்துடன் பயணம் செய்து ஒரு வழியாக கோத்தகிரி சென்றடைந்தனர். மேலும் அரசு பஸ்களை ஓரளவுக்காவது சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்