நாகை பஸ், ரெயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்ல நாகை பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-01-17 18:45 GMT

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்ல நாகை பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருந்து நாகை மாவட்டத்துக்கு வந்திருந்தனர்.

அவர்கள் குடும்பத்தார், உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

பயணிகள் கூட்டம்

இந்த நிலையில் நேற்று காணும் பொங்கலை கடற்கரையில் கொண்டாடிவிட்டு பெரும்பாலானோர் ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக நாகை ரெயில் நிலையம், புதிய, பழைய பஸ் நிலையங்களில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பஸ் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்யாதவர்கள் முண்டியடித்துக் கொண்டு இடம் பிடித்து சென்றனர். இதேபோல் தூத்துக்குடி மார்க்கமாக சென்ற பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்