சேதமடைந்த சாலையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் செல்லும் சாலை மோசமாக உள்ளது. அந்தச் சாலை வழியாக உளியநல்லூர், துறையூர், கோடம்பாக்கம், பெரப்பேரி, மகேந்திரவாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், மருத்துவமனை, தனியார் கம்பெனிகளுக்கு செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.