பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் விபத்தில் பலி: பா.ஜ.க. பிரமுகர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி- மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் விபத்தில் பலியான பா.ஜ.க. பிரமுகர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியை மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்

Update: 2023-01-22 20:10 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் மகாலட்சுமி காலனி சீனிவாசன் நகரில் வசித்து வந்தவர் ஹரிராம்(வயது 49). இவர் பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்திற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்பதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஹரிராம் சென்றிருந்தார். பின்னர் அவர் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். நாகமலை புதுக்கோட்டை அருகே வந்த போது கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஹரிராம் பலியானார்.

இந்த நிலையில் நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஹரிராம் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் ஹரிராமின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு ஹரிராமின் மனைவி சித்ரா, மகள்கள் பிரியதர்ஷினி, நாக நந்தினி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஹரிராமின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். அப்போது அண்ணாமலையிடம் பிரியதர்ஷினி, நாகநந்தனி ஆகியோர் பட்டப்படிப்பு படித்துள்ள தங்களுக்கு அரசு பணி கோரி மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாவட்ட தலைவர் சசிகுமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மண்டல பொதுச்செயலாளர் பழனிச்சாமி, மண்டல பொறுப்பாளர் ராம்தாஸ், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்