தாம்பரம்-நாகர்கோவில் இடையே ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து
பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
* கோவை-நாகர்கோவில் இடையே (வ எண். 16322) காலை 8 மணிக்கு மே மாதம் 3,17-ந் தேதிகளில் இந்த ரெயில் திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* நாகர்கோவில்-கோவை இடையே (16321) காலை 7.35 மணிக்கு மே மாதம் 3, 17-ந் தேதிகளில் இந்த ரெயில் நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* தாம்பரம்-நாகர்கோவில் இடையே (20691) இரவு 11 மணிக்கு இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் மே மாதம் 2, 16-ந் தேதிகளில் இந்த ரெயில் திருச்சி மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* நாகர்கோவில்-தாம்பரம் இடையே (20692) மதியம் 3.50 மணிக்கு இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் மே மாதம் 3, 17-ந் தேதிகளில் நாகர்கோவில் மற்றும் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருச்செந்தூர்-பாலக்காடு இடையே (16732) மதியம் 12.20 மணிக்கு மே மாதம் 3, 17-ந் தேதிகளில் இந்த ரெயில் திருச்செந்தூர் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* பாலக்காடு-திருச்செந்தூர் இடையே (16731) காலை 6 மணிக்கு மே மாதம் 3, 17-ந் தேதிகளில் இந்த ரெயில் திண்டுக்கல் மற்றும் திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.