சேனப்பநல்லூர் புதூரில் பகுதி நேர ரேஷன் கடை

சேனப்பநல்லூர் புதூரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

Update: 2023-10-03 18:38 GMT

துறையூர் ஊராட்சி ஒன்றியம் சேனப்பநல்லூர் புதூரில் ரேஷன் கடை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அங்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. அதனை ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொருட்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர், ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் மற்றும் தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்