ரூ.30 லட்சம் செலவில் பூங்காக்கள்

ரூ.30 லட்சம் செலவில் பூங்காக்கள்

Update: 2022-09-07 12:08 GMT

போடிப்பட்டி

குழந்தைகள் விளையாட நேரம் ஒதுக்குவது அவர்களை உடல் அளவிலும் மனதளவிலும் வலுவுள்ளதாக ஆக்க உதவுகிறது. ஆனாலும் பல இடங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கு போதுமான வசதிகள் இல்லாத நிலையால் குழந்தைகள் மொபைல் போனுக்குள் மூழ்கிப் போகும் அவல நிலை உள்ளது. இந்தநிலையில் குமரலிங்கம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.2020-21 ஆண்டுக்கான 15-வது நிதிக்குழு மானியத்தில் வசந்தம் நகரில் ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பூங்காவும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பூங்காவும் என ரூ. 30 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் மூலம் பூங்காக்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்