பூங்கா திறப்பு

அருப்புக்கோட்டையில் பூங்கா திறக்கப்பட்டது.

Update: 2023-02-13 19:50 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை காந்திநகர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டாமல் தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் தன்னார்வலர் ஒருவர் முயற்சியில் வேலி அமைக்கப்பட்டு பூச்செடிகள் கொண்ட சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார். இதில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்