குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் மும்முமரம்
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் மும்முமரம்
பல்லடம்
பிரிகேஜி, அங்கன்வாடி மையம் துவங்கி எல்.கே.ஜி., யு.கே.ஜி., 1-ம்வகுப்பு வரை குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை அவசியமானதாகிறது. புதிய கல்வியாண்டு தொடங் உள்ள நிலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பணியில் பெற்றோர் ஆர்வமுடன் தயாராகியுள்ளனர். அதற்காக, பிறப்பு சான்றிதழ், போட்டோ, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தயார்படுத்தி வருகின்றனர். இதனால் பல்லடத்தில் தபால் அலுவலகம், அரசு வங்கிகள், இசேவை மையம் போன்ற இடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு தொடங்கவும், புதிய ஆதார் அட்டை பெறவும், ஆதாரில் திருத்தங்கள் செய்யவும் மக்கள் அலைமோதுகின்றனர். இங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து, விண்ணப்பித்துச்செல்கின்றனர்.
இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், குழந்தையின் பிறப்புச்சான்றிதழ், பெற்றோர் ஆதார் இருந்தால் சில நிமிடங்களில் குழந்தைகளை போட்டோ எடுத்து விட்டு சென்று விடலாம். ஆதார் விண்ணப்பித்ததும், செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்., லிங்க் போதுமானது.10 நாட்களில் ஆதார் அட்டை வீடு தேடி வரும். இந்த சேவையானது முற்றிலும் இலவச சேவையாகும்.என்றனர்.
-----------------