பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை

ஓசூரில் விஷ வாயு பரவி மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

Update: 2022-10-14 18:45 GMT

ஓசூர்:

ஓசூரில் விஷ வாயு பரவி மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

வாந்தி, மயக்கம்

ஓசூரில் செப்டிங் டேங்கில் இருந்து விஷவாயு பரவியதில் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் வாந்தி, மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவர்களை பார்வையிட்டார்.

ேமலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள ஆர்.வி. அரசு பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த மாணவர்களை பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டு அறிந்தார்.

குழு அமைப்பு

பின்னர், கலெக்டர் கூறியதாவது:-

ஓசூர் மாநகராட்சி காமராஜ் காலனியில் உள்ள அரசு நடுநிடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மயக்கமடைந்து விட்டார்கள் என்ற தகவலின் அடிப்படையில் 72 குழந்தைகள், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 22 குழந்தைகள், பெற்றோருடன் பாதுகாப்பான நிலையில், அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு குழந்தை மட்டும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அந்த குழந்தை சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, ஓசூர் உதவி கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டு, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவர்கள் நலமுடன் உள்ளனர். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். எனவே, பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ரங்கசாமி, சுமித்ராபாய் தீனதயாளன், தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்