பாப்பாரப்பட்டியில் தைப்பூசத்தை முன்னிட்டுசுப்பிரமணிய சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

Update:2023-02-05 00:15 IST

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி புதிய சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி சாமிக்கு சண்முக ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து திருக்கல்யாணமும், சாமி மயில்வாகனத்தில் பள்ளக்கில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பழைய சுப்பிரமணிய சாமி கோவிலில் ராஜகோபுரம் மற்றும் கோவில் கட்டும் பணிகள் நடைபெற இருப்பதால் தைப்பூச திருவிழாவில் வழக்கமான தோரோட்டம் மற்றும் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கு பதிலாக இடும்பன் பூஜை நடைபெற்றது. இதில் வெள்ளி வேல் மற்றும் இடும்பன் சாமிக்கு சந்தனம், தயிர் மற்றும் பால் உள்ளிட்டவைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இடும்பன் பூஜையில் பெண்கள் மாவிளக்குகளுடன் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்