பா.ஜனதா பொதுக்கூட்டத்துக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
தென்காசியில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்துக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் உள்ள மைதானத்தில் வருகிற 13-ந் தேதி இரவு பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்காக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை மாரியப்பன், தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மாவட்ட துணைத் தலைவர்கள் வக்கீல் முத்துலட்சுமி, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.